பேசும் படம்: இந்தோனேசியாவில் பூகம்பம் தந்த மீளாத் துயர்

பேசும் படம்: இந்தோனேசியாவில் பூகம்பம் தந்த மீளாத் துயர்
Updated on
1 min read

இந்தோனேசியாவில் புதன்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.

இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி வெள்ளிக்கிழையும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மேலே உள்ள படத்தில், யூஸ்ரா ஃபித்ரியானி எனும் தாய் தனது மகளும், மாப்பிள்ளையும் திருமணத்துக்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது மொபைலில் காட்டுகிறார். திருமண நாளில் மணக்கோலத்தில் தூங்கிக் கொண்டிருந்த இவரது மகள் இடிபாடுகளில் சிக்கி பலியானதைச் சொல்லி கதறினார்.

இந்த நிலநடுக்கத்தில் தன் மகள், மாப்பிள்ளையுடன் உறவினர்கள் 7 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தார். வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணம் இப்படி மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டதாக அந்தத் தாய் தன் துயரத்தைப் பகிர்ந்துள்ளார்.

படம்:ஏஎஃப்பி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in