தென்கொரிய அதிபரை பதவி நீக்கக் கோரி தீர்மானம்

தென்கொரிய அதிபரை பதவி நீக்கக் கோரி தீர்மானம்
Updated on
1 min read

தென்கொரிய அதிபர் பார்க் குவென் ஹையை பதவி நீக்கம் செய்யக் கோரி அந்த நாட்டு நாடாளு மன்றத்தில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானம் மீது வரும் 9-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

அதிபர் பார்க் குவென் ஹையின் நெருங்கிய தோழி சோய் சூன் சில் அண்மையில் ஊழல் குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்பட்டார். அதிபருடனான தனது நெருக்கத்தைப் பயன்படுத்தி போலி தொண்டு நிறுவனங்கள் பெயரில் நிதி திரட்டியதாகவும் அரசுப் பணி நியமனங்களில் தலையிட்டதாகவும் சோய் சூன் சில் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த ஊழல் விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று அதிபர் பார்க் குவென் ஹை பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 3 எதிர்க்கட்சிகள் சார்பில் அதிபரை பதவி நீக்கம் செய்யக் கோரி அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தென்கொரிய நாடாளுமன்றத் தில் மொத்தம் 300 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 171 பேர் தீர்மானத்தில் கையெழுத் திட்டுள்ளனர். இந்தத் தீர்மானம் மீது வரும் 9-ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in