

சோவியத் யூனியன் வெளியுறவு அமைச்சராகவும், பின்னர் சுதந்திர ஜார்ஜியாவின் அதிபராகவும் இருந்த எட்வர்ட் ஷெவர்நாத்சே தனது 86-வது வயதில் திங்கள் கிழமை காலமானார்.
இதனை அவரது செய்தித் தொடர்பாளர் மரீனா டவிடஷ்விலி அறிவித்தார்.
நீண்டகால உடல்நல பாதிப்புக் குப் பின் ஷெவர்நாட்சே இறந்த தாக கூறிய மரீனா, அவர் எங்கு இறந்தார் என்பது பற்றிய விவரங்களை கூறவில்லை.
சோவியத் யூனியன் பிளவுக்கு முன் சர்வதேச அரங்கில் கதாநாயக னாக வலம் வந்தவர் ஷெவர் நாத்சே.
கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணைவ தற்கு உதவி புரிந்தவர். அமெரிக்கா சோவியத் யூனியன் இடையிலான பனிப்போர் முடிவுக்கு வருவதில் முக்கியப் பங்காற்றியவர். சோவியத் யூனியனின் கடைசி வெளியுறவு அமைச்சர்.
சோவியத் யூனியன் பிளவுக்குப் பின் அதில் இருந்து உருவான ஜார்ஜியாவின் அதிபராக 1995 முதல் 2003 வரை பதவி வகித்தார் ஷெவர்நாத்சே. ஆனால் 2003-ல் ரோஜா புரட்சிக்குப் பிறகு கட்டாயமாக பதவியில் இருந்து அகற்றப்பட்டதன் மூலம் அவமதிப் புக்கு ஆளானார்.
ஷெவர்நாத்சே மறைவுக்கு முன்னாள் சோவியத் அதிபர் மிகையில் கோர்பச்சேவ், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.