

அமெரிக்காவில் பொய்யான ஆவணங்களைக் கொண்டு எச்-1பி விசா மோசடியில் ஈடுபட்டதாக 32 வயது இந்திய இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹரி கார்னே, அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்காக குடியேற்றத் துறை மேலாளராக பணியாற்றி உள்ளார். இதன்மூலம் அமெரிக்கா வில் பணியாற்ற விரும்பிய வெளி நாட்டவர்களுக்கு ஐடி ஊழியர்கள் என்ற போர்வையில் எச்-1பி விசா வாங்கிக் கொடுத்துள்ளார். அவர்கள் அமெரிக்கா முழுவதும் எஸ்சிஎம் டேட்டா, எம்எம்சி சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாக பணியாற்று வதாக அந்த விசாவில் குறிப் பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை யின்போது, விசா மோசடியில் ஈடுபட்டதை ஹரி கார்னே ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தால் அதிகபட்சமாக 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1.7 கோடி அபராதமும் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.