

சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டுப் போர் தற்போது தீவிரமடைந்துள்ளது. மிதவாத எதிர்க் கட்சிகளின் தலைமையிடமான அலெப்போ நகர் மீது அதிபர் ஆசாத் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.
தற்போது அலெப்போவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதி அதிபர் ஆசாத் படைகளின் வசமாகி உள் ளது. மிதவாத எதிர்க்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள் ளது. போரில் நூற்றுக்கணக் கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் பின்னணியில் சிரியா வில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கனடா சார்பில் ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதன் மீது நேற்றுமுன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 122 நாடுகள் வாக்களித்தன. பெரும் பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. 13 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா உட்பட 36 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.