புது வெள்ளை மழை | லண்டனில் பனிப்பொழிவு... பனி படர்ந்த ஓவல் கிரிக்கெட் மைதானம்!

ஓவல் கிரிக்கெட் மைதானம்
ஓவல் கிரிக்கெட் மைதானம்
Updated on
1 min read

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் அமைந்துள்ள ஓவல் கிரிக்கெட் மைதானம் முழுவதும் பனிப்பொழிவு காரணமாக வெண்ணிறத்தில் போர்வை போர்த்திக் கொண்டிருப்பதை போல உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. அந்தப் படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பிரமிப்பில் உறைந்து போயுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. அங்கு நடப்பு ஆண்டின் முதல் பனிப்பொழிவு பதிவாகி உள்ளதாக தகவல். சாலை தொடங்கி பெரும்பாலான திறந்தவெளி பகுதிகளில் எங்குப் பார்த்தாலும் இந்த பனிப்பொழிவு காரணமாக வெண்ணிற போர்வை போர்த்தி உள்ளதை போல உள்ளது. இதன் காரணமக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானம், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் வானிலை ஆய்வு மையம் சார்பில் லண்டன் மற்றும் தென்கிழக்கு இங்கிலாந்து பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு வெப்பநிலை -15 டிகிரி செல்சியஸுக்கு கீழ் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் வழக்கமாக ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ரன் மழையை பார்த்து வந்த பார்வையாளர்களுக்கு இந்தப் பனி மழை கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in