

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியபோது, ரஷ்யாவின் ராணுவ பலம், அணுஆயுத பலத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று தெரிவித்தார்.
அதிபர் புதின் மாஸ்கோவில் பேட்டியளித்து கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவு செய்தார். அதில் அவர் கூறியபோது, நான் அதிபராக பதவியேற்றவுடன் அமெரிக்காவின் அணுஆயுத கொள்கையை மாற்றி அமைப்பேன். அணுஆயுத பலத்தை பன்மடங்கு அதிகரிப்பேன் என்று தெரிவித்தார்.
உலகளாவிய அளவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அணுஆயுதங்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 90 சதவீத அணுஆயுதங்கள் அமெரிக்கா, ரஷ்யாவிடம் உள்ளன.