

அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள கூடுதலாக அணு ஆயுதங்களை தயாரிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று சீன அரசு ஊடகமான ‘குளோபல் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.
சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி தைவான் என்று அந்த நாடு வாதிட்டு வருகிறது. இதற்கு சவால் விடும் வகையில் தைவான் அதிபர் சாய் இங் வென்னுடன் அமெரிக் காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் தொலைபேசி யில் பேசினார். இதனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் ‘குளோபல் டைம்ஸ்’ நேற்று வெளியிட்ட தலை யங்கத்தில் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவின் அச்சுறுத்தல் களை எதிர்கொள்ள வரும் 2017-ம் ஆண்டில் ராணுவத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அணுஆயுதங்கள், ஏவு கணை தடுப்பு சாதனங்களை அதிகரிக்க வேண்டும். எத்தகைய சவாலையும் சந்திக்கும் திறன் சீனாவுக்கு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.