செல்போனில் சார்ஜ் இல்லையா..? விமானத்தில் இடமில்லை- அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

செல்போனில் சார்ஜ் இல்லையா..? விமானத்தில் இடமில்லை- அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
Updated on
1 min read

தீவிரவாத அச்சுறுத்தல் காரண மாக அமெரிக்க விமான நிலை யங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி சார்ஜ் செய்யப்படாத செல்போன், லேப்டாப்கள் வைத்திருக்கும் பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமான நிலையங் களை குறிவைத்து அல்காய்தா ஆதரவு தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அமெரிக் காவுக்கு நேரடி விமான சேவைகளை இயக்கும் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் அனைத்து விமான நிலையங்களிலும் பாது காப்பு பன்மடங்கு அதிகரிக்கப் பட்டுள்ளது. குண்டுவெடிப்பு தாக் குதல் அச்சுறுத்தல் காரணமாக சார்ஜ் செய்யப்படாத செல்போன் கள், லேப் டாப்புகளுடன் பொது மக்கள் விமானப் பயணம் மேற் கொள்ள தடை விதிக்கப்பட் டுள்ளது. இவை தவிர அனைத்து எலெக்ட்ரானிக் சாதனங்களையும் பாதுகாப்புப் படையினர் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டு வருகின்றனர்.

காலணிகளில் வெடிகுண்டு?

காலணிகளில் குண்டுகளை மறைத்து எடுத்து வரலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பயணிகளின் ஷுக்களும் தீவிர சோதனைக்கு உள்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து அமெரிக்க போக்குவரத்து பாதுகாப்பு நிர் வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், எலெக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன. அவை அனைத்தும் தீவிர சோத னைக்கு உட்படுத்தப்படும். இதே போல் பயணிகளின் ஷூக்களும் சோதனையிடப்படும். இந்த கூடுதல் சோதனைகளுக்கு பயணிகள் அனைவரும் ஒத் துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாகவே அமெரிக்க விமான நிலையங் களில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in