மாடி படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த புதின்

அதிபர் புதின்
அதிபர் புதின்
Updated on
1 min read

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் (70), மாஸ்கோவில் உள்ள தனது வீட்டு படிக்கட்டில் கடந்த வாரம் இறங்கும் போது கால் இடறி கீழே விழுந்தார் என ‘தி டெலிகிராம்’ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 5 படிக்கட்டுகளை தாண்டி புதின் கீழே விழுந்ததில், அவரது முதுகுதண்டின் அடிப்பகுதி எலும்பு (டெயில் போன்) பாதிப்படைந்ததாகவும், இதன் காரணமாக ஏற்கெனவே குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த புதினுக்கு தானாக மலம் வெளியேறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் உடல் நிலை மோசம் என ஏற்கெனவே பல முறை செய்திகள் வெளியாயின. கடந்த மாதம் கியூபா அதிபர் மிகுல் டயஸ்-கேனலை, அதிபர் புதின் சந்தித்து கை குலுக்கிய போது, அவரது கைநடுங்கியதாகவும், அவர் சிரமப்பட்டு நடப்பதாகவும் இங்கிலாந்தைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று ஏற்கெனவே செய்தி வெளியிட்டது.

உக்ரைன் போர் சம்பவம் அதிபர் புதினுக்கு கவலை அளித்துள்ளதாகவும், இதனால் அவரது உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிலாந்து முன்னாள் உளவாளி ஒருவர் கூறியிருந்தார். இரத்த புற்றுநோயால் அதிபர் புதின் உடல்நிலை மோசமடைந்துள்ளது என அவருக்கு நெருக்கமான ஒருவர் ஏற்கெனவே தகவல் தெரிவித்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in