

மெக்சிகோ பட்டாசுச் சந்தையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 31 பேர் பலியாகினர். 72-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா நெருங்கும் போதெல்லாம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பட்டாசு வெடி விபத்துகள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது.
இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்களே உள்ள நிலையில், மெக்சிகோ புறநகர் பகுதியான துல்தெபெக்கில் சுமார் 300 கடைகள் கொண்ட பிரம் மாண்டமான பட்டாசுச் சந்தையில் பட்டாசு வாங்க ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர்.
உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் 2.50 மணிக்கு சந்தையின் ஒரு பகுதியில் திடீரென பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. அதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கடைகள் முழுவதும் தீப்பிடித்து எரிந்தன.
பல வண்ண நெருப்பு ஜுவாலை கள் மற்றும் விதவிதமான சத்தங் களுக்கு இடையே, அங்கிருந்த பெரும்பாலான பட்டாசுக் கடைகள் தீயில் கருகின சாம்பலாகின. தீயணைப்புப் படையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.
இந்த பயங்கர விபத்தில், 25 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். பலத்த தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 6 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவ மனையில் இறந்தனர். மேலும், 72 பேர் காயங்களுடன் மீட்கப் பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்தவர்களை அடையாளம் காண முடியாத அளவுக்கு உடல் கள் கருகிவிட்டதால், மரபணு ஆய்வுகளின் மூலம் அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பணிக்காக தடயவியல் நிபுணர் களை அழைத்துள்ளதாக அதி காரிகள் தெரிவித்தனர்.
மெக்சிகோவில் பட்டாசு விற் பனை உரிமங்களை வழங்கும் பொறுப்பை ஏற்றுள்ள ராணுவத் தின் சார்பில் அவசரகால உதவி களும், ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் போக்குவரத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.