உலகின் ஆடம்பர நகரங்களில் நியூயார்க், சிங்கப்பூர் டாப்... வாழ்வதற்கு செலவு குறைந்த நகரம் நம்ம சென்னை!

படம்: பா.பிரகாஷ்
படம்: பா.பிரகாஷ்
Updated on
1 min read

உலக அளவில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் (Most Expensive Cities) பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் ஆகிய நகரங்கள் முதன்மை இடங்களை வகிக்கின்றன. இந்தப் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ள நகரங்கள் வாழ்வதற்கு செலவு குறைந்த நகரங்களாக கருதப்படுகின்றன. அந்த வகையில், உலக அளவில் சென்னை நகரம் வசிப்பதற்கு செலவு குறைந்த நகரமாகக் கருதப்படுகிறது.

மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த நகரங்களின் பட்டியலை வேர்ல்டு வைடு (worldwide) அமைப்பு வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுக்கு உலகளவில் உள்ள 172 நகரங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அன்றாட வாழ்க்கைச் செலவு அடிப்படையில் ஆடம்பர நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள முதல் 10 நகரங்கள்:

  1. நியூயார்க் - அமெரிக்கா
  2. சிங்கப்பூர் - சிங்கப்பூர்
  3. டெல் அவிவ் - இஸ்ரேல்
  4. ஹாங்காங் - சீனா
  5. லாஸ் ஏஞ்சல்ஸ் - அமெரிக்கா
  6. ஸுரிஜ் - ஸ்விட்சர்லாந்து
  7. ஜெனீவா - ஸ்விட்சர்லாந்து
  8. சான் பிரான்சிஸ்கோ - அமெரிக்கா
  9. பாரீஸ் - பிரான்ஸ்
  10. கோபன்ஹெகன் - டென்மார்க்

இப்பட்டியலில் கடைசி 10 இடங்களில் உள்ள நகரங்கள், மக்கள் வசிப்பதற்கு செலவு குறைந்த நகரங்களாக கருதப்படுகின்றன. அதன்படி, இந்தப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள சிரியாவின் டமாஸ்கஸும், லிபியாவின் திரிபோலியும் செலவு குறைந்த நகரங்களாக கருதப்படுகின்றன. மேலும், இந்தப் பட்டியலில் இந்தியாவின் சென்னை, அகமதாபாத், பெங்களூரு ஆகிய நகரங்களும் இடம்பெற்றுள்ளன.

மொத்தம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 172 நகரங்களில், சென்னைக்கு 164-வது இடமும், அகமதாபாத்துக்கு 165-வது இடமும், பெங்களூருக்கு 161-வது இடமும் கிடைத்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in