

இராக், மொசூல் நகர் அருகே சந்தையில் 3 கார்குண்டுகளை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் 23 பேர் பலியானதாக இராக் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதம் பொறுப்பேற்றுள்ளது.
மொசூலுக்கு அருகேயுள்ள இந்த சிறிய ஊர் ஐஎஸ் பிடியிலிருந்து சமீபமாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தக் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மொசூலுக்கு சில கிமீ தொலைவில் உள்ள கோக்ஜாலி என்ற ஊரை அரசப்படைகள் நவம்பர் 1-ம் தேதியன்று ஐஎஸ் பிடியிலிருந்து விடுவித்திருந்தது.
இந்நிலையில் இந்த நகரின் சந்தையில் 3 கார்குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளது ஐஎஸ். இதில் 15 பேரும் 8 போலீஸாரும் பலியாகியுள்ளனர்.