அமெரிக்க- சீன உறவு மேம்பட வேண்டும்: புதிய அதிபர் ட்ரம்ப் விருப்பம்

அமெரிக்க- சீன உறவு மேம்பட வேண்டும்: புதிய அதிபர் ட்ரம்ப் விருப்பம்
Updated on
1 min read

அமெரிக்கா, சீனா இடையிலான உறவு மேம்பட வேண்டும் என்று அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித் துள்ளார்.

சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி தைவான் என்று அந்த நாடு வாதிட்டு வருகிறது. இந்த விவ காரத்தில் சீனாவுக்கு சவால் விடும் வகையில் தைவான் அதிபர் சாய் இங் வென்னுடன், டொனால்டு ட்ரம்ப் அண்மையில் தொலை பேசியில் பேசினார். இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது.

அமெரிக்காவின் அச்சுறுத்தல் களை எதிர்கொள்ள அதிக அணு ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது என்று சீன அரசு ஊடகம் குளோபல் டைம்ஸ் தெரிவித்தது.

ட்ரம்ப் கருத்து

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பேன் என்று ட்ரம்ப் தனது பிரச்சாரத்தில் கூறினார். இதற்கும் சீனா கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.

புதிய அதிபர் ட்ரம்ப் பல்வேறு மாகாணங்களின் தலைநகருக்கு சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அந்த வரிசையில் டெஸ் மோய்னஸில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

அங்கு அவர் பேசியபோது, அமெரிக்காவும் சீனாவும் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள். இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அயோவா மாகாண ஆளுநர் டெரி பிரான்ஸ்டாட்டை சீனாவுக் கான புதிய அமெரிக்க தூதராக ட்ரம்ப் நியமித்துள்ளார். இவர் ட்ரம்பின் நீண்டகால நெருங்கிய நண்பர் ஆவார். டெஸ் மோனிஸ் கூட்டத்தின்போது டெரியும் பங்கேற்றார்.

கூட்டத்தில் அவர் பேசியபோது, சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நானும் 30 ஆண்டு கால நண்பர்கள். எனவே சீனாவுக்கான தூதராக என்னால் திறம்பட பணியாற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in