பாகிஸ்தான் ஓட்டலில் தீ விபத்து: 11 பேர் பலி; காயம் 75

பாகிஸ்தான் ஓட்டலில் தீ விபத்து: 11 பேர் பலி; காயம் 75
Updated on
1 min read

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஓட்டல் ஒன்றில் இன்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். 75 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில்,"பாகிஸ்தானில் கராச்சி நகரிலுள்ள ரிகண்ட் பிளாசா ஓட்டலின் அடித்தளத்தில் சமையலறையில் உண்டான தீ, ஒட்டலின் ஆறாவது மாடி வரையும் பரவியது. இதில் 11 பேர் பலியாகினர். 75 பேர் காயமடைந்தனர். ஓட்டலில் தங்கியிருந்த சுமார் 100 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 3 பேர் பெண்கள், காயமடைந்தவர்களில் சில வெளிநாட்டினவரும் அடங்குவர்.

இந்தத் தீ விபத்து குறித்து ஊடகத்திடம் கராச்சி ஆளுநர் வாசிம் அக்தர் கூறியதாவது, "தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மீட்புப் படையினர் தீவிரமாக மீட்புப் பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஓட்டலில் அவசர வழி இல்லாததால் பலர் ஜன்னலை உடைத்து வெளியே செல்ல முயன்றனர். அதில் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு புகையின் காரணமாக சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது" என்று கூறினார்.

இந்த தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in