

பாலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்குவதற்காக ஐ.நா வின் 2017 பட்ஜெட்டுக்கு 20 நாடு கள் நன்கொடை வழங்க முன் வந்திருப்பதாக நேற்று அறிவிக்கப் பட்டது. அதில் இந்தியா சார்பில் வருடாந்திர நன்கொடையாக ரூ.8.48 கோடி நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினர் திட்டத்துக்கான முதல் செயலா ளர் மகேஷ்குமார் இது குறித்து கூறும்போது, ‘‘ஐ.நா.வின் நிவாரண முகமை குழு கூட்டம் 5-ம் தேதி நடந்தது. அதில் பாலஸ்தீன அகதி களுக்கு எழுந்துள்ள பிரச் சினைக்கு எவ்வித தீர்வும் காண முடியாதது மிகுந்த வருத்த மளிக்கிறது. தற்போதைய அசா தாரணமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்தியாவும் பாலஸ்தீன அகதிகளுக்கு உதவ முன் வந்துள்ளது. பாலஸ்தீன மக்களின் துயரத்தில் இந்தியாவும் தோள்கொடுக்கும்’’ என்றார்.
ஐ.நா.வின் பாலஸ்தீன அகதி கள் நிவாரண முகமை, 53 லட்சம் பாலஸ்தீன அகதிகளுக்கு சுகா தாரம், கல்வி உட்பட பல்வேறு உதவிகளைக் கடந்த 65 ஆண்டு களாக வழங்கி வருகிறது.