Published : 25 Jul 2014 05:45 PM
Last Updated : 25 Jul 2014 05:45 PM

சீற்றமிகு தினம்: இஸ்ரேலின் 3 ஏவுகணைகளை வீழ்த்தியதாக ஹமாஸ் அறிவிப்பு

இஸ்ரேலின் 3 ஏவுகணைகளை இன்று வீழ்த்தியதாக, ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்திற்கும் காஸாவில் உள்ள ஹமாஸ் மற்றும் ஜிகாதி கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நடைபெற்று வரும் போர் 18-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

இதில் அதிக அளவில் பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். சர்வதேச கண்டனத்திற்கும், மனித உரிமை அடிப்படையிலான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் தாண்டி ஹமாஸில் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் மற்றும் சர்வதேச விமானங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமானங்கள் ஜார்டான், காஸா, சிரியா உள்ளிட்ட பகுதிகளில் பறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இஸ்ரேலின் 3 ஏவுகணைகளை இன்று வீழ்த்தியதாக ஹமாஸ் கிளர்ச்சி அமைப்பு அறிவித்துள்ளது. டெல் அவிவ் விமான நிலையத்தின் அருகே ஏவுகணைகள் வீழ்த்தப்பட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.

அதே போல, காஸாவில், ஜிகாத் அமைப்பின் முக்கிய தலைவரின் வீட்டின் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஜிகாதி தலைவர் ஒருவரும் அவரது இரு மகன்களை கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் ஜிகாதிகளின் கைவசம் உள்ள 45 இடங்களில் இன்று தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

இதுவரையில் காஸாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 815 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்று கூறப்படுகிறது.

பதில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், மேற்குக்கரையில் வாழும் பாலஸ்தீனர்கள், இன்றைய தினம் ஹமாஸில் 'சீற்றமிகு தினம்' என்று கூறி அனுசரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x