

உலக நாடுகளிடையே ஒத் துழைப்பை ஏற்படுத்தும் கருவியாக தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ் தான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சுமார் 20 வீரர்கள் பலியாயினர்.
இதையடுத்து, பாகிஸ்தானுக்கு நெருக்கடி தரும் வகையில், சிந்து நதிநீர் ஆணைய பேச்சு வார்த் தையை நிறுத்தி வைக்க இந்திய அரசு ஆலோசனை நடத்தியதாக அப்போது தகவல் வெளியானது.
இந்நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் சார்பில், தண்ணீர், அமைதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் ஐநாவுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் பேசியதாவது:
கடந்த 70 ஆண்டுகளில் 60 சர்வதேச நீர்நிலைகள் தொடர்பாக உலக நாடுகளுக்கிடையே சுமார் 200 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. நீர்நிலைகள் ஒரு நாட்டு எல்லையைத் தாண்டி பாயும் போது, சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்பதை அனுபவங்கள் உணர்த்தி உள்ளன. அதேநேரம் ஒவ்வொரு நீர்நிலைக்கும் தனித் தனி குணாதிசயங்கள் உள்ளன.
கடந்த 1947-ல் இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது ஆறுகளும் கிழக்கு மேற்கு என பிரிந்தன. இதையடுத்து ஆற்று நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பக்கத்து நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டன. 1960-ல் சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.
மனித வாழ்வுக்கு தண்ணீர் அவசியம் என்பதால், சர்வதேச நாடுகளுக்கிடையே தண்ணீர் பிரச்சினை தொடர்பாக மோதல் ஏற்படாது என கூறிவிட முடியாது.
உலக நாடுகள் பல்வேறு துறை களில் இணைந்து செயல்பட வேண்டிய நிர்பந்தம் மற்றும் சுற்றுச் சூழல் சவால்களை இணைந்து எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே, உலக நாடு களிடையே ஒத்துழைப்பை ஏற் படுத்துவதற்கான கருவியாக தண் ணீரைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் எதிர்ப்பு
இந்தியாவின் கருத்துக்குப் பதில் அளிக்கும் வகையில், ஐநாவுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி பேசும்போது, “உலக நாடுகளுக்கிடையே ஒத் துழைப்பை ஏற்படுத்துவதற்கான கருவியாக தண்ணீரைப் பயன் படுத்த அனுமதிக்கக்கூடாது. இது தொடர்பான ஒப்பந்தம் ஏற்படு வதைத் தடுப்பதற்காக உலக நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.