

காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை உயிரிழந்தது; இந்தியாவைச் சேர்ந்த் 32 அமைதிக்காப்பாளர்கள் காயமடைந்ததாக ஐ. நா. தெரிவித்துள்ளது.
காங்கோவின் கிஷேரோ பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தியாவைச் சேர்ந்த அமைதிக்காப்பாளர்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென குண்டு வெடித்ததில் இந்திய அமைதிக்காப்பாளர்கள் 32 பேர் காயமடைந்ததாகவும், குழந்தை ஒன்று பலியானதாகவும் ஐ. நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு பின்னணி குறித்து உறுதியான தகவல் இதுவரை வெளிவரவில்லை.
முன்னதாக 1996 - 2003 ஆம் ஆண்டு காங்கோவில் ஏற்பட்ட உள்நாட்டு போரில் லட்சக்கணக்கானவர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.