

ஜனநாயக ஆதரவாளர் என்ற காரணத்தால் ஜெனரல் காமர் பஜ்வா, பாகிஸ்தான் ராணுவ புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக உள்ள ஜெனரல் ரஹீல் ஷெரீப் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இதையடுத்து, பஜ்வாவை புதிய தளபதியாக நவாஸ் ஷெரீப் நியமித்துள்ளார்.
இவுர் காஷ்மீர் விவகாரம், உள்நாட்டு தீவிரவாத பிரச்சினை களில் அதிக அனுபவம் வாய்ந்த வர். ஐ.நா. அமைதிப் படை சார்பில் காங் கோவில் பணியாற்றியுள் ளார். அப்போது அவருடன் இந்திய முன்னாள் ராணுவ தளபதி விக்ரம் சிங்கும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னணி நாளிதழான ‘தி நியூஸ்’ வெளியிட்ட செய்தியில், “ராணுவத்தின் புதிய தளபதி ராணுவ நிபுணராக மட்டுமின்றி, ஜனநாயக ஆதரவாளராகவும் இருக்க வேண்டும் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் விரும்பினார். இதையடுத்து, ஒரே நாளில் ராணுவ பயிற்சி மையத்திலிருந்து தேர்ச்சி பெற்ற 5 பேர் பற்றிய விவரங்களை அரசு கவனமாக பரிசீலித்தது.
அதில், மற்றவர்களைவிட பஜ்வா அதிக அனுபவம் வாய்ந் தவர் என தெரியவந்தது. மேலும் ஜனநாயகத்துக்கு ஆதரவானவர் எனவும் தெரியவந்ததால் அவர் புதிய ராணுவ தலைமை தளபதி யாக நியமிக்கப்பட்டுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.
மற்றொரு முன்னணி நாளித ழான டான் வெளியிட்ட செய்தியில், “ஜெனரல் பஜ்வா அரசுடன் சுமுக உறவு வைத்துக்கொள்வதை விரும்புகிறவர் என தெரியவந்தது. இதனால் இவரை புதிய தளபதியாக நவாஸ் ஷெரீப் நியமித்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது. துறை சார்ந்த நிபணர்களும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது. இதில் 35 ஆண்டுகளுக்கும் மேல் ராணுவ ஆட்சிதான் நடை பெற்றுள்ளது. ஆட்சியாளருக்கும் ராணுவத் துக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
சமீபத்தில்கூட நவாஸ் ஷெரீபுக்கும் ரஹீல் ஷெரீபுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாக அந்நாட்டு ஊடகங் களில் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.