

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு சரித்திர வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.
கலிப்போர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக இருந்த கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி சார்பில் கலிபோர்னியா செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வரலாற்று வெற்றியின் மூலம் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
கமலா ஹாரிஸின் தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் ஆவார். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.