

சிரியாவில் ரஷ்ய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் தீவிரவாதிகள் 30 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, "ரஷ்ய படைகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் சிரியாவின் மேற்குப் பகுதியில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அலெப்போ நகரில் தீவிரவாதிகளை அழிப்பதற்கான நடவடிக்கையில் ரஷ்ய படைகள் ஈடுபட்டுள்ளன.
கடந்த 2015 - ம் ஆண்டு முதல் ரஷ்ய படைகள் சிரிய அதிபர் பஷார் ஆசாத்துடன் இணைந்து சிரியாவில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
சமீபசில வருடங்களாக சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போருக்கு இதுவரை 3 லட்சம்பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.