

லஞ்சப் புகாரில் சிக்கிய பொருளா தார அமைச்சர் அலெக்ஸி உல்யுக யேவை பதவியில் இருந்து அதிபர் விளாடிமிர் புதின் நீக்கி உள்ளார்.
ரஷ்யாவில் பொருளாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் அலெக்ஸி உல்யுகயேவ். ரஷ்ய எண்ணெய் நிறுவனத்தின் பங்குகள் பரிவர்த்தனையில் இவர் முறைகேடு செய்ததாகவும், 2 மில்லியன் டாலர் அளவுக்கு லஞ்சம் பெற்றதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை குழு தீவிரமாக விசாரணை நடத்தியது. கடந்த 2 மாதங்களாக அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து அலெக்ஸியை அதிபர் விளாடிமிர் புதின் நீக்கி உள்ளதாக அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித் துள்ளார். இதுகுறித்து திமித்ரி வெளியிட்ட அறிக்கையில், ‘‘அலெக்ஸி மீது அதிபர் புதினுக்கு நம்பிக்கை போய்விட்டது. அதனால் அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்கி உள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.