ஆப்கனில் அல் காய்தாவின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்

ஆப்கனில் அல் காய்தாவின் முக்கிய  தலைவர் கொல்லப்பட்டார்
Updated on
1 min read

அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆப்கனில் அல் - காய்தாவின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டதை அமெரிக்கா உறுதிபடுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது, "அமெரிக்காவின் குன்னார் மாகாணத்தில் அக்டோபர் 23-ம் தேதி அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் அல்-காய்தாவின் முக்கிய தலைவரான பரூக் அல் அதானி கொல்லப்பட்ட தகவலை உறுதி செய்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் அல் - காய்தா மற்றொரு தலைவரான பிலால் அல் உடாபியும் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

கொல்லப்பட்ட பரூக் அல் அதானி ஒசாமா பின்லேடனின் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in