

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினரும், முன்னாள் தூதருமான ஜலியா விக்ரம சூரியாவை ஊழல் வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.
இலங்கை அதிபராக ராஜ பக்சே பதவி வகித்த காலத்தில், அமெரிக்காவுக்கான இலங்கை தூதராக பணியாற்றி வந்தவர் ஜலியா விக்ரம சூரியா. இவர் வாஷிங்டனில் பணியாற்றிய போது, தூதரக கட்டிடத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக ரூ.1 கோடியே 67 லட்சத்தை அவர் கமிஷனாக பெற்றதாக புகார் எழுந்தது.
இந்தச் சூழலில் இலங்கையின் புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேனா பதவியேற்றதும் ராஜபக்ச காலத்தில் நடந்த அனைத்து ஊழல் புகார்களையும் விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் விக்ரம சூரியா மீதான புகாரும் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இலங்கையில் இருந்து தப்பிச் செல்வதற்காக கொழும்பு விமான நிலையத்தில் காத்திருந்த விக்ரம சூரியாவை, நிதி குற்றப்பிரிவு புலனாய்வு பிரிவு போலீஸார் சுற்றி வளைத்து நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர் கொழும்பு மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயரத்னே, வரும் டிசம்பர் 2-ம் தேதி வரை போலீஸார் காவ லில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். இதையடுத்து, விக்ரம சூரியா போலீஸ் காவலில் அடைக்கப்பட்டார்.