ட்ரம்ப், புதினுடன் நட்புறவு: பிலிப்பைன்ஸ் அதிபர் விருப்பம்

ட்ரம்ப், புதினுடன் நட்புறவு: பிலிப்பைன்ஸ் அதிபர் விருப்பம்
Updated on
1 min read

டொனால்டு ட்ரம்புடனும், புதினுடனும் நட்புறவு கொள்ள விரும்புவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றி குறித்து டியுடெர்ட் கூறும்போது, "அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப்புக்கு எனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். டொனால்டு டிரம்ப் இந்த வெற்றியைப் பெற தகுதியானவர். ஆசிய பசுபிக் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உற்சாகமாக இருக்கிறேன். டிரம்ப் மற்றும் புதினுடன் நட்புகொள்ள விரும்புகிறேன்" என்றார்.

மேலும், அமெரிக்காவுடனான உறவு குறித்த கேள்விக்கு பதிலளித்த டியுடெர்ட் "பிலிப்பைன்ஸ் யாருடனும் மோதல் கொள்ள விரும்பவில்லை. அனைவரிடமும் நட்புறவு கொள்ளவே விரும்புகிறது" என்று கூறினார்.

முன்னதாக பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட், போதை மருந்து வலைப்பின்னலை அழிப்பதற்காக மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளில் சில ஜனநாயக முறைகளற்ற விதத்தில் உத்தரவிட்டார். இது அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியது.

இது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் டியுடெர்டிடம் உங்களது போதை ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஒபாமா கேள்வி எழுப்பினால் என்ன சொல்வீர் என்று கேட்டிருந்தார், இதற்கு பதிலளித்த டியுடெர்ட் " என்னை கேள்வி கேட்க ஒபாமா யார்?'' என்று ஆவேசமாகப் பேசியிருந்தார்.

இதனை அடுத்து அமெரிக்க படைகள் பிலிப்பைன்ஸிலிருந்து வெளியேற வேண்டும் என அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் கூறினார். இதனால் பிலிப்பைன்ஸ் – அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது.

இந்த நிலையில் ட்ரம்ப் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபின் தனது நடவடிக்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார் ரோட்ரிக்கோ டியுடெர்ட் என்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in