Last Updated : 03 Nov, 2016 09:08 PM

 

Published : 03 Nov 2016 09:08 PM
Last Updated : 03 Nov 2016 09:08 PM

மோடிக்கு விசா மறுத்தவர் ஹிலாரி: குடியரசு கட்சி குற்றச்சாட்டு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க தடை விதிக்கப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ஹிலாரி கிளிண்டன் செயல்பட்டார் என்று குடியரசு கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

குஜராத் கலவரம் காரணமாக அந்த மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு அமெரிக்க அரசு விசா வழங்க மறுத்தது. அவர் இந்திய பிரதமராக பதவியேற்ற பிறகு அந்த தடையை அமெரிக்க அரசு உடனடியாக நீக்கியது.

இந்த விவகாரத்தை சுட்டிக் காட்டி குடியரசு கட்சியின் இந்து பிரிவு ஹிலாரிக்காக எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது. இதுதொடர்பாக குடியரசு கட்சி இந்து கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் கூறியிருப்பதாவது:

ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானின் ஆதரவாளர். அந்த நாட்டுக்கு கோடிக்கணக்கான பணம், ராணுவ உபகரணங்களை ஹிலாரி வழங்கினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விசா மறுக்கப்பட்டதன் பின்னணியில் ஹிலாரி செயல்பட்டார்.

ஹிலாரியின் தற்போதைய உதவியாளர் ஹூமா அபெடின் ஒரு பாகிஸ்தானியர். ஹிலாரியின் கணவர் பில் கிளிண்டன், காஷ்மீரை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்து கொடுக்க விரும்புபவர். எனவே அமெரிக்காவில் வாழும் இந்துக்கள் ஹிலாரிக்கு வாக்களிக்கக்கூடாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x