

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியரும், பிரிட்டனின் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முதல் நீதிபதியுமான மோட்டா சிங்(86) மரணம் அடைந்தார்.
கென்யாவின், நைரோபியில் 1930-ம் ஆண்டு பிறந்த மோட்டா சிங், 16-வது வயதில் தந்தை சர்தார் தலிப் சிங்கை இழந்தார். போராடி பள்ளிப் படிப்பை முடித்த இவர், பகல் நேரத்தில் குடும்பத்துக்காக உழைத்தும், இரவு நேரத்தில் சட்டப் படிப்பும் படித்தார்.
இங்கிலாந்தில் சட்ட மேற்படிப்பு முடித்து, 1967-ல் இங்கிலிஷ் பார் கவுன்சிலில் சேர்ந்து, பின்னர் 1982-ல் லண்டன் நீதிமன்றத்தில் ஆசியா வைச் சேர்ந்த முதல் நீதிபதி என்ற பெருமையுடன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அதேபோல், பிரிட்டன் நீதிபதிகள் தலையில் அணியும் பாரம்பரிய ‘விக்’ இல்லாமல் சீக்கிய தலைப்பாகை அணிந்த ஒரே நபராக மோட்டா சிங் இருந்தார்.
கடந்த 2002-ம் ஆண்டு ஓய்வு பெற்ற மோட்டா சிங்குக்கு, நீதித் துறையில் சாதனைகள் புரிந்ததற் கான வீரத்திருமகன் விருதை 2010-ம் ஆண்டில் பக்கிம்ஹம் அரண்மனை வழங்கி கவுரவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை திடீரென மோட்டா சிங் மயக்க முற்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.