ராணுவ புரட்சி ஏற்பட்டால் இந்தியா முறியடிக்கும்: அமைச்சர் திஸ்ஸநாயகே உறுதி

ராணுவ புரட்சி ஏற்பட்டால் இந்தியா முறியடிக்கும்: அமைச்சர் திஸ்ஸநாயகே உறுதி
Updated on
1 min read

இலங்கையில் எதிர்க்கட்சிகள் சதி

இலங்கையில் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் சதிச் செயலை இந்தியா முறியடிக்கும். தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு இந்தியாவின் ஆதரவு முழுமையாக இருக்கிறது என அந்நாட்டின் சமூக சேவை கள் துறை அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸ நாயகே தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பேசிய கூட்டு எதிர்க்கட்சித் தலைவர் தினேஷ் குணவர்தனா, ‘‘ஜன நாயக சுதந்திரம் நசுக்கப்படுவதால் இலங்கையில் ராணுவப் புரட்சி ஏற்படுவதற்கான அபாயம் சூழ்ந் துள்ளது’’ என எச்சரித்திருந்தார். 2017-ம் ஆண்டுக்கான நிதிநிலை ஒதுக்கீடு குறித்து அதிபர் சிறிசேனா பேசிக்கொண்டிருந்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் சிறிசேனாவின் ஆட்சியை அகற்ற ராணுவத்துடன் இணைந்து எதிர்க்கட்சிகள் கூட்டுச் சதியில் ஈடுபட முயற்சிப்பதாக சமூக சேவைகள் துறை அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸநாயகே மறை முகமாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் எதிர்க்கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வானொலிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

ராணுவ புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் சதிச் செயலை இந்தியாவின் துணை யுடன் மைத்ரிபால சிறிசேனா அரசு முறியடிக்கும். சிறிசேனா அரசு இந்தியாவுடன் நல்ல நட்புறவைப் பேணி வருகிறது. இதனால் இலங்கையில் ராணுவப் புரட்சி வெடிப்பதை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொண்டிருக்காது. ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் சிறிசேனா அரசை காப்பாற்றும் வகையில் இந்தியா இரு போர் கப்பல்களை அனுப்பி வைக்கும்.

ஜனநாயக முறைப்படி ஆட்சி அமைக்க முடியாது என தெரிந்ததால் தான், எதிர்க்கட்சிகள் ராணுவ புரட்சி நடக்கவுள்ளதாக பீதியை ஏற்படுத்தும் பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளன. எதிர்க்கட்சி கள் வடக்கு மாகாணங்களில் சமூக விரோத குழுவை உருவாக்கியதன் உண்மையான நோக்கம் என்ன வென்பது அரசுக்குத் தெரியும்.

கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின்போது கள்ள ஓட்டுகளை பெற்று வெற்றி பெறவே சமுக விரோத குழுவை எதிர்க்கட்சிகள் உருவாக்கின. ஆனால் அவர் களது ஆசை நிறைவேறவில்லை. அந்தக் குழுவுடன் தொடர்பு வைத் துள்ளவர்கள் குறித்த அனைத்து விவரங்களும் அரசுக்கு அறிக்கை யாக கிடைத்துள்ளது. எனவே ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி இந்த முறையும் நிறைவேறாது. இவ் வாறு அவர் கூறினார்.

இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந் தார். சிறிசேனாவை வெற்றி பெற வைக்க இந்தியா பின்னணியில் இருந்து ஆதரவு அளித்ததாக எதிர்க்கட்சிகளும், ராஜபக்சேவும் குற்றம்சாட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in