

டொனால்டு ட்ரம்ப் அனைத்து அமெரிக்கர்களுக்கு சிறந்த அதிபராக செயல்படுவார் என நம்புவதாக ஹிலாரி கூறியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததையடுத்து தனது ஆதரவாளர்களிடமும், பொது மக்களிடமும் நியூயார்க் நகரில் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் ஹிலாரி கிளின்டன் பேசும்போது, "அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப்புக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் தோல்வி வருத்தமாகத்தான் உள்ளது.
நம் மக்கள் நாங்கள் நினைத்தை விட பிளவுபட்டுள்ளனர். எனது தோல்வியை ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் அனைத்து அமெரிக்க மக்களுக்கும் சிறந்த அதிபராக பணியாற்றுவார் என நம்புகிறேன்.
அமெரிக்கர்கள் இன்னும் "அந்த உயரத்துக்கான கனவு இன்னும் தகர்ந்துவிடவில்லை. என்றாவது யாரேனும் ஒருவர் அதை அடைவர்" ( அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக தேர்வாக முடியாமல் போனதை மறைமுகமாக குறிப்பிட்டார்) என்று பேசினார்.
ஜனநாயகக் கட்சியின் சார்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் அக்கட்சியைச் சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.