Published : 13 Nov 2016 11:34 AM
Last Updated : 13 Nov 2016 11:34 AM

2020 தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் இந்திய பெண்: அமெரிக்க ஊடகங்கள் கணிப்பு

கடந்த 8-ம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலோடு 34 செனட்டர் பதவிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் கலிபோர்னியா செனட்டர் பதவிக்கு போட்டியிட்ட கமலா ஹாரிஸ் (51)'அமோக வெற்றி பெற்றார்.

இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையைச் சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர்.

புதிய அதிபர் ட்ரம்புக்கு எதிராக கமலா ஹாரிஸ் இப்போதே தீவிர பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். அமெரிக்கா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ட்ரம்பின் இனவாத கொள்கைகள், தெளிவில்லாத உலகப் பார்வை, தவறான பொருளாதார கொள்கைகள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்து வருகிறார்.

அவருக்கு அதிபர் ஒபாமாவும் துணை அதிபர் ஜோ பிடேனும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆப்பிரிக்க தந்தை, ஆசிய தாய்க்கு பிறந்து அமெரிக்கராக வாழ்ந்து வரும் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் பன்முகத்தன்மைக்கு முன்மாதிரி யாக விளங்குகிறார். ஹப்பிங்டன் போஸ்ட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், வரும் 2020-ம் ஆண்டு தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் முன்னிறுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளது.

இதேபோல பல்வேறு ஊடகங்கள் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வுக்கு கமலா ஹாரிஸ் பொருத்தமானவர் என்று கருத்து தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x