

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மசூதி ஒன்றில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 27 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்தனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, "காபூலில் உள்ள மசூதியில் இன்று (திங்கட்கிழமை) மக்கள் அனைவரும் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது தீவிராவாதி ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். இதில் 27 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்தனர்" என்றார்.
இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.