

தலைநகர் குன்மிங்கை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஷான்ஜி மாகாண பகுதி வழியாக கடந்து செல்கிறது. ஷான்ஜி மாகாணத்தில் வடக்குப் பகுதியில் நேற்று முன்தினம் மிதமான மழை பெய்ததால் பெய்ஜிங்-கின்மிங் நெடுஞ்சாலை ஈரமாக இருந்தது. இதன்காரணமாக அந்தச் சாலையில் சென்ற இரு வாகனங்கள் மோதிக் கொண்டன. அவற்றின் பின்னால் வந்த வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக மோதின. மொத்தம் 56 வாகனங்கள் விபத்தில் சிக்கி உருக்குலைந்தன.
இதில் 17 பேர் உயிரிழந்தனர். 37 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.