இங்கிலாந்தின் பிரதமரானார் இந்திய வசம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்

இங்கிலாந்தின் பிரதமரானார் இந்திய வசம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்
Updated on
1 min read

லண்டன்: இங்கிலாந்தின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் நியமிக்கப்பட்டார். மன்னர் மூன்றாம் சார்லஸ், அவரை பிரதமராக நியமித்து உத்தரவிட்டார்.

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை ராஜினமா செய்வதாக கடந்த 20ம் தேதி அறிவித்ததை அடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுவால் ரிஷி சுனக் நேற்று தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, இங்கிலாந்து பிரதமராக தேர்வான அவருக்கு கன்சர்வேட்டி கட்சியின் எம்.பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட சர்வதேச தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், லிஸ் ட்ரஸ் முறைப்படி தனது ராஜினமா கடிதத்தை, மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்து இன்று வழங்கினார். இதையடுத்து, மன்னரிடம் இருந்து வந்த அழைப்பை ஏற்று ரிஷி சுனக் பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் சென்றார். அப்போது, நாட்டின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக்கை, மன்னர் மூன்றாம் சார்லஸ் நியமித்தார்.

இதையடுத்து இங்கிலாந்தின் 57-வது பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவி ஏற்றுள்ளார். கடந்த 200 ஆண்டுகளில் இங்கிலாந்தின் மிக இளம் பிரதமர் எனும் பெருமையும் 42 வயதாகும் ரிஷி சுனக்கிற்கு கிடைத்துள்ளது. | வாசிக்க > பிரிட்டனின் புதிய பிரதமர்: யார் இந்த ரிஷி சுனக்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in