உலகின் அசுத்தமான நபராக அறியப்பட்டவர் 94 வயதில் மறைவு

அம் ஹஜி | கோப்புப் படம்
அம் ஹஜி | கோப்புப் படம்
Updated on
1 min read

தெஹ்ரான்: உலகின் அசுத்தமான நபராக அறியப்பட்டு வந்த ஈரானைச் சேர்ந்த அம் ஹஜி என்பவர் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 94.

ஈரானை சேர்ந்தவர் அம் ஹஜி. இவர் ஈரான் தென் பகுதியில் அமைந்துள்ள டெஜ்ஹா என்ற கிராமத்தில் வசித்து வந்தார். உலகின் நீண்ட காலமாக குளிக்காமல் அசுத்தம் நிறைந்தவராக இருப்பதாக இவரைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதன் மூலமாகவே ஹஜி பிரபலம் ஆனார். சுமார் 50 வருடங்களுக்கு மேலாக அம் ஹஜி குளிக்காமல் இருந்ததாக நம்பப்படுகிறது.

சாலை ஓரங்களில் படுத்துக்கொண்டு, அங்கு கிடைக்கும் உணவுகளை உண்டு வாழ்ந்து வந்த ஹஜிக்கு ‘குளித்தால் நோய் தாக்கும்’ என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே அவர் தன்னை அசுத்தமாக வைத்திருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் அவரை, அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குளிக்க வைத்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வயது மூப்பின் காரணமாக ஹஜி உயிரிழந்திருக்கிறார். அம் ஹஜியை மையமாக வைத்து ஆவணப் படங்களும் வெளியாகி உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in