கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாட்டில் 3-ம் முறையாக ஜி ஜின்பிங் அதிபராக தேர்வு: உலக வளர்ச்சிக்கு சீனா தேவைப்படுவதாக பேச்சு

ஜி ஜின்பிங் | கோப்புப்படம்
ஜி ஜின்பிங் | கோப்புப்படம்
Updated on
1 min read

பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வதுதேசிய மாநாடு கடந்த 16-ம்தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.

மாநாட்டின் கடைசி நாளான நேற்று கட்சியின் மூத்த தலைவர்கள் 200 பேர் அடங்கிய புதிய மத்தியகுழு உருவாக்கப்பட்டது. இந்தமத்திய குழு, அதிபர் பொறுப்புக்கு 3-வது முறையாக ஜி ஜின்பிங்கையும், நிலைக்குழுவுக்கு இதர உறுப்பினர்களையும் தேர்வு செய்தது.

அதிபராக தேர்வான பிறகு ஜி ஜின்பிங் பேசியதாவது:

உலகத்தின் ஒத்துழைப்பின்றி சீனா மேம்பாடு காண முடியாது. அதேபோன்று, உலகத்தின் வளர்ச்சிக்கும் சீனாவின் தேவை அவசியம் என்பதை யாரும் மறுக்க இயலாது. 40 ஆண்டுகளுக்கும் மேலான சளைக்காத முயற்சியின் விளைவாக சீர்திருத்தம் மற்றும் வாய்ப்புகளின் கதவுகளை திறந் துள்ளோம். இதனால், வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் நீண்ட கால சமூக உறுதிப்பாடு எனும் இரண்டு அற்புதங்களை உருவாக்கி காட்டியுள்ளோம்.

தற்போது 3-வது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டுள் ளேன். இந்த சிறப்பான வாய்ப்பை திறம்பட பயன்படுத்திக் கொண்டு விடாமுயற்சியால் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் சீன மக்கள் என் மீது வைத்திருக்கும் பெரும் நம்பிக்கைக்குப் பாத்திர மாக இருப்பேன். அதேபோன்று, கட்சியின் நம்பிக்கைக்கும் தகுதியுள்ளவனாக இருக்க உழைப்பேன். இவ்வாறு ஜி ஜின்பிங் கூறினார்.

சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் ஜி ஜின்பிங் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

69 வயதான ஜி ஜின்பிங் தற்போது சீனாவின் அதிபராக 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட போதிலும், அதற்கான முறைப்படியான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள சீனநாடாளுமன்ற ஆண்டு கூட்டத்தில்தான் வெளியாகும். மா.சே.துங்கிற்குப் பிறகு சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக ஜி ஜின்பிங்தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

ஜி ஜின்பிங்கின் நம்பிக்கைக்கு உரியவரும், ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஷங்காய் பிரிவு முன்னாள் தலைவருமான லீ கியாங்2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் மாதம்நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் லீ கியாங் சீனாவின் பிரதமராக முறைப்படி அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in