மிச்செல் ஒபாமாவுக்கு எதிராக இனவெறி பதிவு: அமெரிக்க மேயர் ராஜினாமா

மிச்செல் ஒபாமாவுக்கு எதிராக இனவெறி பதிவு: அமெரிக்க மேயர் ராஜினாமா
Updated on
1 min read

அமெரிக்காவின் முதல் பெண்மணியான மிச்செல் ஒபாமாவை அந்நாட்டு மேயர் ஒருவர் குரங்கு என்று ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தன் மேயர் பதவியை பமிலா ராஜினாமா செய்தார்.

மேற்கு வெர்ஜினியாவின் மேயரான பமிலா ராம்சே டெய்லர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "வெள்ளை மாளிகையில் ஹீல்ஸ் அணிந்த குரங்கைப் பார்த்து நான் சோர்வடைந்து விட்டேன். புதிதாக வந்துள்ள அதிபரின் மனைவியைப் பார்ப்பது புத்துணர்ச்சியாக இருக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.

மிச்செல் ஒபாமாவுக்கு எதிராக இனவெறி பதிவிட்ட மேயர் பமிலா ராம்சே டெய்லர்

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பமிலா ராம்சே பேசும்போது, "நான் பதிவிட்டது தவறான முறையில் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஜனநாயகக் கட்சியின் தலைமை பெண் அதிகாரி பெலிண்டா, மிச்செல் ஒபாமாவிடம் மன்னிப்புக் கடிதம் அனுப்பியுள்ளார்.

பமிலா ராம்சே டெய்லரின் இந்த இனவெறிப் பதிவுக்கு அமெரிக்காவில் கண்டனக் குரல்கள் பொதுமக்கள் மத்தியில் எழுந்ததைத் தொடர்ந்து தனது மேயர் பதவியை பமிலா திங்கட்கிழமை ராஜினாமா செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in