அமெரிக்காவை விட்டு வெளியேறு: இந்திய இளைஞரை மிரட்டிய மர்ம நபர்கள்

அமெரிக்காவை விட்டு வெளியேறு: இந்திய இளைஞரை மிரட்டிய மர்ம நபர்கள்
Updated on
1 min read

முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிப்பேன், சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன், குடியுரிமை இல்லா தவர்களை வெளியேற்றுவேன். அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை வெளிநாட்டினர் பறிக்க அனுமதிக்க மாட்டேன் என்று தனது பிரச்சாரத்தில் ட்ரம்ப் வாக்குறுதி அளித்தார்.

அமெரிக்காவில் சுமார் 33 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இது அமெரிக்க மக்கள் தொகையில் ஒரு சதவீதம் ஆகும். ட்ரம்ப் அதிபராகி இருப்பதால் அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் மெக்ஸிகோ மற்றும் தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சினா, இந்தியா உள்ளிட்ட நாடு களில் இருந்து அமெரிக்காவில் விரோதமாக குடியேறியவர்களும் கவலை அடைந்துள்ளனர். இது தொடர்பாக ட்விட்டரில் ஏராள மானோர் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்

வடகலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணிக் என்பவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

காஸ் நிலையத்தில் என்னை சிலர் தடுத்து நிறுத்தினர். இது எங்கள் தேசம். நீ வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது என மிரட்டினர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

டென்னிஸி மாகாணம், மெம்பிஸ் நகரை சேர்ந்த யாசீர் கூறியபோது, இனிமேல் என் மனைவி பர்தா அணிய முடியுமா என்பது தெரியவில்லை, என் குழந்தைகள் பாதுகாப்பாக தெருவில் நடந்து செல்ல முடியுமா என்பதும் கவலையளிக்கிறது என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் வாழும் சிறுபான்மையினர் அனைவரும் இதேபோன்ற கருத்துகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in