

காஸாவில் உடனடியாக போரை நிறுத்த வேண்டுமென்று இஸ்ரேலையும், ஹமாஸ் அமைப்பையும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளன. காஸாவில் கடந்த 20 நாட்களாக நடைபெற்று வரும் மோதலில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் உயிரிழந்துள்ளனர்.
மனிதாபிமான அடிப்படையில் எவ்வித நிபந்தனையும் விதிக்கா மல் இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும். இதன் மூலம் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அவசர கால உதவிகளை செய்ய முடியும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூறியுள்ளது.
காஸாவில் நடைபெற்று வரும் தாக்குதல்கள் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 15 உறுப்பு நாடுகளும் பங்கேற்ற இக்கூட்டத்தில், காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு வலியுறுத் துவது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் முழுமையாக மதிக்கப்பட வேண்டும். அப்பாவி பொது மக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத் தியுள்ளது. 20 நாட்களாக நடந்து வரும் போரில், 1030 பாலஸ்தீனர்களும் 46 இஸ்ரே லியர்களும் உயிரிழந்துள்ளனர்.
நெதன்யாகுவிடம் ஒபாமா வலியுறுத்தல்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமெ ரிக்க அதிபர் பராக் ஒபாமா, போரை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகை வெளியிட் டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட் குண்டுகளை வீசுவதையும், சுரங்கம் அமைத்து தாக்குதல் நடத்துவதையும் அமெரிக்க வன்மையாகக் கண்டிக்கிறது. அதே நேரத்தில் பாலஸ்தீனத் தில் அப்பாவி மக்கள் அதிகம் பேர் உயிரிழப்பது கவலை அளிக் கிறது. இஸ்ரேல் தரப்பிலும் பலர் உயிரிழந்துள்ளனர். அங்கு மனிதஉரிமை என்பது கேள்விக் குறியாகி வருகிறது.
எனவே காஸாவில் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நெதன் யாகுவிடம் ஒபாமா கூறினார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக இஸ்ரேல் அரசு அறிவித்த 24 மணி நேர போர் நிறுத்தத்தை ஹமாஸ் இயக்கத்தினர் ஏற்க மறுத்து ஞாயிற்றுக் கிழமை ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவமும் காஸாவை குறிவைத்து மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.