மைக்கேல் ஜாக்சனின் திரில்லர் பாடலுக்கு நடனம் ஆடிய ஒபாமா தம்பதி

மைக்கேல் ஜாக்சனின்  திரில்லர் பாடலுக்கு  நடனம் ஆடிய ஒபாமா தம்பதி
Updated on
1 min read

அமெரிக்காவில் ஹாலோவீன் தினத்தை ஒட்டி மைக்கேல் ஜான்சனின் 'திரில்லர்' பாடலுக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஓபாமா தனது மனைவி மிச்செல்லுடன் வெள்ளை மாளிகையில் நடனம் ஆடினார்.

வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் தினத்தை முன்னிட்டு திங்கட்கிழமை இரவு டிரிக் ஆர் டிரிட்டர்ஸ் ( trick-or-treaters) என்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏறக்குறைய 4,000 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் வாஷிங்டன்னை சேர்ந்த ஆரம்பப் பள்ளி குழந்தைகள் மற்றும் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்கள். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் அமெரிக்க அதிபர் ஒபாமா வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடம் ஒபாமா பேசும்போது, "ஹாலோவீன் தினத்தில் நீங்கள் அணிந்திருக்கும் வேடங்கள் சில பயமுறுத்த கூடியதாகவும், சில வித்தியாசமாகவும், சில ரசிக்க கூடியதாகவும் உள்ளது" என்றார்.

நிகழ்ச்சியில் ஒபாமாவும், அவரது மனைவி மிச்செல்லும் மைக்கேல் ஜாக்சனின் புகழ்பெற்ற 'திரில்லார்' பாடலுக்கு நடனமாடியது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in