Published : 08 Oct 2022 01:00 PM
Last Updated : 08 Oct 2022 01:00 PM

அமெரிக்க வான்வழித் தாக்குதல்: சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் இரு தலைவர்கள் பலி

கோப்புப் படம்

டமாஸ்கஸ்: சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர்கள் இருவர் அமெரிக்க பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐஎஸ் துணைத் தலைவர் அபு அல் உமாவி மற்றும் மற்றொரு முக்கிய தலைவர் கொல்லப்பட்டனர். இதில் ஐஎஸ்ஸின் ஆயுதங்களும் தாக்கி அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் அமெரிக்க தரப்புக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.” என்று செய்தி வெளியிடப்பட்டது.

ஐஎஸ்ஸை இந்த பிராந்தியத்திலிருந்து தங்களது நட்பு நாடுகளிலிருந்தும் அகற்றுவதே தங்கள் நோக்கம் என்று அமெரிக்க பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள சில இடங்களில் சண்டை அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்தச் சூழலில், துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி துருக்கி படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அமெரிக்கப் படைகள் சிரியாவில் ஐஎஸ் அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x