Published : 09 Nov 2016 02:30 PM
Last Updated : 09 Nov 2016 02:30 PM

யுஎஸ் பங்குச்சந்தை சரிவும் கனடா புகும் அதிருப்தியாளர்களும்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிருப்தி அடைந்த அமெரிக்கர்கள் பலர் கனடாவுக்கு குடிபெயர்வதை பரிசீலித்து வருகின்றனர்.

அதிபர் தேர்தலில் கருத்துக் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி ட்ரம்ப் முன்னிலை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்நிலையில், அமெரிக்க பங்குச்சந்தை சரிவு கண்டுள்ளது. நியூயார்க் பங்குச்சந்தையின் டோ பீச்சர்ஸ் 450 புள்ளிகள் சரிந்தது.

அமெரிக்க பங்குச்சந்தை மட்டுமல்லாமல் இந்திய பங்குச்சந்தை, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு ஆசிய பங்குச்சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டது.

கனடாவுக்கு இடம்பெயர ஆர்வம் காட்டும் அமெரிக்கர்கள்:

இதற்கிடையில், ட்ரம்ப் வெற்றி வாய்ப்பு நெருங்க ஆரம்பித்தபோதே, அதிருப்தி அடைந்த அமெரிக்கர்கள் பலரும் கனடாவுக்கு இடம்பெயரும் முயற்சியில் ஈடுப்படத் தொடங்கினர்.

ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கனடா குடியேற்றத் துறை இணையதளத்தில் தகவல் திரட்ட முயன்றதால் அந்த இணையதளம் தற்காலிகமாக முடங்கியது. இதனால் அந்த இணையதளத்தை தேடியவர்கள் பலருக்கும் 'சர்வர் கோளாறு' என்ற தகவல் மட்டுமே திரையில் தெரிந்தது.

279-ஐ கடந்து ட்ரம்ப்:

அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 தேர்வாளர்கள் வாக்குகளைப் பெற வேண்டும். இந்நிலையில், ட்ரம்ப் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ப்ளோரிடா (29), ஜார்ஜியா (16), ஓஹியோ (18), வடக்கு கரோலினா (15), வடக்கு டகோடா (3), தெற்கு டகோடா (3), நெப்ராஸ்கா (4), கான்ஸாஸ் (6), ஒக்லஹாமா (7), டெக்சாஸ் (38), வயோமிங் (3), இண்டியானா (11), கெண்டக்கி (8), டென்னிஸ்ஸி 911), மிஸ்ஸிஸிப்பி (6), அர்கான்ஸாஸ் (6), லூசியானா (8), மேற்கு வர்ஜீனியா (5), அலபாமா (9), தெற்கு கரோலினா (9), மான்டோனா (3), இதாகோ (5), மிசௌரி (10), பென்சில்வேனியா ஆகிய பகுதிகளில் வெற்றி பெற்று 279 தேர்வாளர்களை பெற்று அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x