அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு
Updated on
1 min read

கலிஃபோர்னியா: அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் ஒன்று கலிஃபோர்னியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு வாழும் இந்தியர்கள் அச்சம் மற்றும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கவ்வுர் (27) அவரது கணவர் ஜஸ்தீப் சிங் (36), இவர்களது உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் இருந்து கடத்தப்பட்டனர். இதனையடுத்து மெர்சட் கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து காணாமல் போனவர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலை ஒட்டிய ஒரு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. அருகிலிருந்த விவசாய நிலத்தில் விவசாயம் செய்துகொண்டிருந்த நபர் சடலங்கள் கிடப்பது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் 4 பேரின் சடலமும் மீட்கப்பட்டது. இந்தக் கடத்தல் தொடர்பாக ஜீஸஸ் மேனுவல் சால்கடோ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கடத்தல் சம்பவம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்துவதாக கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே தெரிவித்துள்ளார். கொலையான குடும்பத்தின் பூர்வீகம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம். இவர்கள் சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in