Published : 06 Oct 2022 07:27 AM
Last Updated : 06 Oct 2022 07:27 AM
ஸ்டாக்ஹோம்: இந்தாண்டுக்கான வேதியிய லுக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் சுவீடிஸ் அகாடமி ஆஃப் சயின்சஸ் நோபல் பரிசு தேர்வுக் குழு நேற்று தெரி வித்துள்ளதாவது: 2022-ம் ஆண்டின் வேதியிய லுக்கான நோபல் பரிசு பெண் விஞ்ஞானி கரோலின் ஆர்.பெர்டோஸி, மார்டன் மெல்டால் மற்றும் கே. பெரி ஷார்ப்லெஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. "கிளிக் கெமிஸ்ட்ரி" மற்றும் பயோ-ஆர்தோகனல் வேதியியல் ஆராய்ச்சி மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டதற்காக அவர்கள் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்படும் 8-வது பெண் என்ற பெருமை கரோலினுக்கு கிடைத்துள்ளது. அதேபோன்று, வேதியியலில் 2 நோபல் பரிசுகளை வென்ற 5-வது விஞ்ஞானி என்ற பெருமையை ஷார்ப்லெஸ் தட்டிச் சென்றுள்ளார் இவ்வாறு தேர்வுக் குழு தெரிவித் துள்ளது. இயற்பியலுக்கான நோபல் பரிசு,ஆலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப்.கிளவுசர் மற்றும் ஆன்டன் ஜெயிலிங்கர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந் தளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உருவாக்கிய சோதனை கட்டமைப்பின் வளர்ச்சி, குவாண்டம் தொழில்நுட்பத்தின் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது.
குறிப்பாக, குவாண்டம் நிலை கள் மற்றும் அவற்றின் அனைத்து அடுக்குகளின் பண்புகளை திறம் பட கையாளும், நிர்வகிக்கும் திறனை இவர்களின் கண்டுபிடிப்பு வழங்கியுள்ளது. இவ்வாறு தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டில் வழங்கப்பட்ட இயற்பியலுக்கான நோபல் பரிசும் இதேபோன்று 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டது. காலநிலை மாற்றத்தைப் புரிந்து கொள்ள உதவியாக இயற்கையின் சிக்கலான சக்திகளை விளக்குவதற்கும், கணிப்பதற்கும் தேவையான இயற்பியல் கோட்பாட்டை உருவாக் கியற்காக சியுகுரோ மானபி, கிளாஸ் ஹசல்மேன் மற்றும் ஜியோர்ஜியோ பாரிசி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இன்று இலக்கியத்துக்கு, நாளை அமைதிக்கான நோபல் பரிசும், அக்டோபர் 10-ல் (திங்கள்கிழமை) பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT