மொசூலில் வீழ்கிறது ஐஎஸ்: இராக் அரசுப் படை முன்னேற்றம்

மொசூலில் வீழ்கிறது ஐஎஸ்: இராக் அரசுப் படை முன்னேற்றம்
Updated on
1 min read

இராக்கின் மொசூல் நகரில் அரசுப் படைகளுக்கும், ஐஎஸ் இயக்கத்தினருக்கும் இடையே போர் கடுமையாகி வருகிறது.

கடந்த 28 மணி நேரமாக மொசூல் நகரில் இராக் அரசுப் படையினருக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. மொசூல் நகரின் வடக்கு, தெற்கு, கிழக்கு பகுதிகளில் பதுங்கி இருக்கும் ஐஎஸ் அமைப்பினரிடம் இராக் அரசுப் படைகள் தொடர்ந்து கடுமையாக சண்டையிட்டு வருகின்றன.

அரசுப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையில் ஐஎஸ் அமைப்பு தொடர்ந்து கார் வெடிகுண்டு தற்கொலை தாக்குதல், எண்ணெய் கிணறுகளுக்கு தீவைப்பது போன்ற செயல்களில் ஆங்காங்கே ஈடுபட்டு வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக, இராக்கின் மொசூல் நகரை 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். அந்த நகரை மீட்க இராக் அரசுப் படைகள் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிரமாகப் போரிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in