மொசூலில் உணவில்லாமல் ஏழைகள் தவிப்பு: ஐ.நா.

மொசூலில் உணவில்லாமல் ஏழைகள் தவிப்பு: ஐ.நா.
Updated on
1 min read

ஐஎஸ்ஸுக்கு எதிராக நடைபெறும் சண்டையில் இராக்கின் மொசூல் நகரில் ஏழைகள் உணவில்லாமல் தவிப்பதாக ஐ.நா. கூறியுள்ளது.

இது குறித்து இராக்கில் உள்ள ஐ. நா.வின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் லிஸே கிராண்டே கூறும்போது, "எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, இராக்கின் மொசூல் நகரில் அமெரிக்க ஆதரவு பெற்ற இராக் அரசுப் படைகளுக்கும், ஐஎஸ்ஸுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருவதால் அந்நகரில் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் ஏழை மக்கள் உணவில்லாமல் தவித்து வருகின்றனர். இது மிகுந்த கவலை அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, இராக்கின் மொசூல் நகரை 2014 ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இந்த நிலையில் மொசூல் நகரை மீட்க இராக் அரசுப் படைகள் அமெரிக்கப் படைகளுடன் இணைந்து ஒரு மாதத்துக்கும் மேலாக ஐஎஸ்ஸுக்கு எதிராக தீவிரமாகச் சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in