பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் சர்வதேச சட்டமானது

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் சர்வதேச சட்டமானது
Updated on
1 min read

பருவநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்துக்கு நேற்று சர்வதேச சட்ட அந்தஸ்து வழங்கப் பட்டது.

சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள புவிவெப்பமயமாதலை கட்டுப் படுத்த உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சிய ஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்து வதற்கான பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த ஆண்டு பாரிஸில் நடந்த கூட்டத் தின்போது எட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்தியா உட்பட 96 நாடுகள் இந்த ஒப்பந்தத் தில் முறைப்படி கையெழுத்திட்டு இணைந்துள்ளன. மேலும் சில நாடுகள் அடுத்து வரும் மாதங் களுக்குள் இணையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற் கான பாரிஸ் ஒப்பந்தத்துக்கு நேற்று சர்வதேச சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் பாரிஸில் பருவநிலை மாநாடு நடந்தபோது கொண்டு வரப்பட்ட ஒப்பந்தத்தில் 192 நாடு கள் ஆதரவு தெரிவித்திருந்தன.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்த மானது நடைமுறைக்கு வரவேண்டு மெனில் கரியமில வாயுவை கட்டுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ள உலக நாடுகளில், 55 நாடுகளாவது இதில் இணைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் போது இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோலியம், மின்சாரம் போன்ற துறைகளில் அதிகம் பாதிப்பு ஏற்படும். இந்தப் பிரச்சினையை தீர்க்க காற்றாலை, நீர்மின் திட்டம் போன்ற மாற்று எரிசக்தியைப் பெருமளவு பயன்படுத்த போவதாக இந்தியா அறிவித்துள்ளது.

இதற்கிடையே இந்த ஒப்பந்தத் தின்படி பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டங்களை வகுக்கும் நோக்கில் அடுத்த வாரம் மொராக்கோவில் முக்கிய கூட்டம் நடைபெறவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in