ரஷ்ய பள்ளிக்கூடத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

ரஷ்ய பள்ளிக்கூடத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உட்பட 6 பேர் பலி
Updated on
1 min read

மாஸ்கோ: ரஷ்யாவில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

ரஷ்யாவின் மத்திய பகுதியில் இருக்கிறது இசேவ்ஸ்க் நகரம். இங்குள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக ரஷ்ய உள்துறை அமைச்சகம் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில், இன்று போலீஸாருக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதில் இசேவ்ஸ்க் நகைல் அமைந்துள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரின் சடலமும் கிடைத்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியின் ஆளுநர் அலெக்ஸாண்ட ப்ரெச்லோவ் கூறுகையில், உயிரிழந்தவர்களில் பள்ளிக் குழந்தைகளும் அடங்குவர். ஆனால் எத்தனை பேர், யார் அவர்கள் என்ற தகவல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in