இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி தீர்வை எட்ட வேண்டும்:ஐ.நா. பொதுச்செயலாளர் அறிவுரை

இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதி தீர்வை எட்ட வேண்டும்:ஐ.நா. பொதுச்செயலாளர் அறிவுரை
Updated on
1 min read

இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் சண்டை நடைபெறுவது கவலையளிக்கிறது, இரு நாடுகளும் அமைதி தீர்வை எட்ட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் அறிவுறுத்தியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 7 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

இதில் பாகிஸ்தான் தரப்புக்கு அதிக இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. வேறுவழியின்றி இந்தப் பிரச்சினை குறித்து ஐ.நா. சபையில் பாகிஸ்தான் அரசு நேற்று முன்தினம் முறையிட்டது. இதைத் தொடர்ந்து ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காஷ்மீர் எல்லைப் பகுதி களில் இந்திய, பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே கடும் சண்டை நடைபெறுவது கவலையளிக்கிறது. இருநாடுகளும் அமைதித் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அமைதி நடவடிக்கைகளுக்கு ஐ.நா. சபை முழு ஆதரவு அளிக்கும்.

எல்லையில் இனியும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்து தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in