

நியூயார்க்: உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பார்வைதான் மிகவும் சரியானது என்று பேசியுள்ளார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில் நடந்த பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு இவ்வுலகை பிரித்துக் கொண்டிருக்கிறது. காலனி ஆதிக்க காலத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது.
இவ்விவகாரத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதுதான் மிகவும் சரியானது. அவர் "இது போருக்கான காலம் அல்ல. போர்களின் காலம் முடிந்துவிட்டது. இது பழிவாங்குதலுக்கான நேரமும் இல்லை. மேற்குலகை பழிவாங்கவும், கிழக்கத்திய நாடுகளுக்கு எதிராக செயல்படும் நேரமல்ல. இது அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து சமத்துவத்தை நிலைநாட்டு அனைவருக்குமான பொதுவான சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைக்கும் காலமாகும்" என்றார். அதுதான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஷங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, உக்ரைன் மீதான படையெடுப்பை கைவிட்டு ரஷ்யா அமைதியின் வழியில் திரும்ப வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று கூறியிருந்தார். பிரதமர் மோடியின் பேச்சை மேற்கோள் காட்டி பிரதமர் மேக்ரான் ஐ.நா. சபையில் பேசியது சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது.